தனுஷின் நடிப்பில் வெளிவந்த மாரி எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால் தன் வெற்றிக்கூட்டணியான விஐபி டீமுடம் இணைந்து உருவாக்கியுள்ள தங்கமகன் படத்தை எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்த நிலையில் டீசர் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இதே நாளில் தான் உதயநிதி நடித்த கெத்து படமும் வரவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.