விஜய்- முருகதாஸ் கூட்டணி என்பது ஒரு வெற்றி கூட்டணி. இவர்கள் சேர்ந்து எடுத்த துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் ரசிகர்களிடம் மாஸ் ஹிட்.

தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்க இருக்கின்றனர், அப்படத்தின் படப்பிடிப்பும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவதி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசை என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவும் ஏ.ஆர். ரகுமான் தான் விஜய் 62வது படத்திற்கு இசையமைக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.