நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன.

நயன்தாரா
நயன்தாரா

தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்க்க சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நயன்தாரா கேட்டுக் கொண்டதன்பேரில் தான் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தானா சேர்ந்த கூட்டம் பட ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா

தானா சேர்ந்த கூட்டம் ஹிட்டாக வேண்டி தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. கோவிலில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கோவிலில் நயன்தாரா ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிரித்தபடி போஸ் கொடுக்க விக்கியோ தரையை பார்த்தபடி இருக்கிறார்.