விஜய் 62வது படத்தின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து எங்கே, எத்தனை நாட்கள் நடக்கிறது- முழு விவரம் இதோ

விஜய்-62
விஜய்-62

வரும் தீபாவளிக்கு தமிழ் சினிமா எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.

ஏனெனில் அஜித்தின் விசுவாசம், விஜய்யின் 62வது படம், சூர்யா படம் என மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

தற்போது விஜய்யின் 62வது படம் பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

Loading...