சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

தற்போது இவர் தமிழ் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சரித்திர படத்தை செளகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் வீரமாதேவி என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.