இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ . இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், இயக்குனர் செந்தில் வீராசாமி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தர்புகா சிவா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர். சமீபத்தில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர், ‘மறுவார்த்தை’ , ‘நான் பிழைப்பேனோ’, ‘விசிறி’ ஆகிய 3 பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள போட்டோ காட்சிகள் டிவிட்டரில் வைரலாகி பரவி வருகிறது.