அஜித் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம்வேதாளம். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெறும்‘ஆலுமா டோலுமா’ என்ற பாடலின் டீசர் வெளிவந்தது. தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளிவரவுள்ளதாம்.

இந்த வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளிவரும் என படக்குழு கூறியுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.