இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தை அடுத்து இயக்கும் படத்துக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தை அடுத்து இயக்கும் படத்துக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்தப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புராடக் ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது.

இந்நிலையில், மணி ரத்னத்தின் இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஏறும் வரவேற்ப்பு பெற்றது. தமிழில் செக்க சிவந்த வானம் என்றும், தெலுங்கில் நவாப் என்றும் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

செக்க சிவந்த வானம் திரைப்படமானது கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைக் களம் என்று கூறப்படுகிறது.

சிம்பு இஞ்னியராகவும், விஜய் சேதுபதி தொழிலாளியாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அரவிந்தசாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இப்படத்தை பற்றிய மேலும் தகவலுக்கு Pirapalam.com -ஐ பின்பற்றுங்கள்.

Loading...