இளைய தளபதி விஜய் தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராட்டங்களை கடந்து தான் இந்த நிலையை அடைந்தார். ஆனால், அவரிடம் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு விஜய் அனைத்து படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கின்றார் என்பது தான்.

இதை எல்லாம் முறியடித்து கதிரேசன், ஜீவானந்தம் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் மிரட்டிய படம் தான் கத்தி. அதிலும் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் அத்தனை இயல்பாக ஒரு விவசாயி படும் கஷ்டத்தை திரையில் வெளிப்படுத்தியிருப்பார். இதற்காக இவருக்கு பல விருதுகள் கிடைக்கு என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விருதுகளை தாண்டி ரசிகர்களின் விசில் சத்தத்திற்கு உரியவர் தான் விஜய்.

கத்தி படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிவடைகின்றது, நாட்டிற்கு தேவையான ஒரு அருமையான படைப்பை கொடுத்தமுருகதாஸ், அவர்களுக்கும் அதில் நடித்த இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.