ஷங்கரின் கனவுப்படமான எந்திரன் 2010ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் ஷங்கர் மிகவும் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதை தாண்டிவில்லன் நடிகராக யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் தான் பெரிய குழப்பம் நீடித்து வந்தது.

தற்போது ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கேட்ட சம்பளமான ரூ 100 கோடியை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்து விட்டதாம்.

மேலும், இப்படம் ரஜினி மற்றும் டெக்னிஷியன் சம்பளம் எல்லாம் சேர்த்து படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 350 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.