அமலா பால் நடித்துவரும் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ரிலீஸானது.

அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பால் ஜோடியாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் அமலா பால்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை காஜல் அகர்வால் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

கார் வரி ஏய்ப்பு வழக்கு நெருக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான அமலாபால், அதிலிருந்து மீண்டு கடந்த வாரம் பாண்டிச்சேரியில் தனது கண்களை தானமாக வழங்கினார்.

இயக்குநர் விஜய்யை பிரிந்து வாழும் அமலாபால் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகி வந்தாலும், தனது இலக்கை நோக்கி நடைபோட்டு வருகிறார் அமலாபால்.