மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2-ன் படப்பிடிப்பு!

நாடோடிகள் 2
நாடோடிகள் 2

கடந்த 2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமாரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த படம் நாடோடிகள்.

கடந்த 2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமாரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த படம் நாடோடிகள். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தாயாருக்கும் இப்படத்தில், பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அதேசமயம் இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தேனீ மாவட்டத்தில் நடந்து முடிந்தது. தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மதுரையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்ட பாடலின் படப்பிடிப்பு வரும் 11-ம் தேதி காட்சியாக்கப்பட உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்படும் இப்பாடலில் பல்வேறு திரைநட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.

Loading...