நடிகர் பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. ஜிகிர்தண்டா, நேரம், மசாலா படம் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான பாபி சிம்ஹா , இப்போது ஹீரோவாக கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

‘உறுமீன்’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ரேஷ்மி மேனனுடன் பாபி சிம்ஹாவுக்கு காதல் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த முடிவை பாபிசிம்ஹா- ரேஷ்மி மேனன் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் என்று தெரிகிறது.