நடிகர் ரஜினியின் ட்விட்டர் கருத்துக்கு வே. மதிமாறன் தனது முகநூலில் மொதல்ல ஒழுங்கா சினிமா எடுங்க! அப்புறம் அறிவுரை சொல்லலாம் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இதனால் போலுசாருக்கு போரட்டக்கார்களுக்கும் தள்ளுமுல்லு ஏற்பட்டது. அப்பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் போலீசாரை தாக்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று நடந்த இச்சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவர்கள் தாக்கப்படுவது தான் இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் வந்த வண்ணம் உள்ளனர். அதில் ஒன்றாக திராவிட கழகத்தின் உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் வே. மதிமாறன் அவர்கள் ரஜினியின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

அதைக்குறித்து அவர் தனது முகநூலில் கூறியதாவது:-

போலிசை தலைவர் எப்படி வெட்டுவாரு தெரியுமா?

வன்முறைக்குப் பதில் வன்முறை. ரவுடித் தனத்திற்குப் பதில் ரவுடித் தனம். கடத்தல்காரன், கொள்ளைக்காரன், டான்.

அடிதடிதான் தீர்வு என்று தனது முந்தைய படம் வரைக்கும் மட்டுமல்ல, இனி வர இருக்கும் படம் வரையிலும், கும்மாங்குத்து, வெட்டுக்குத்து. வெடிகுண்டுகளையே உள்ளடக்கமா வைச்சி கோடிஸ்வரனாக இருக்கிற சூப்பர் ஸ்டார் சொல்றார்,

‘வன்முறை கலாச்சாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே ஆபத்து’ என்று.
வன்முறை கலாச்சாரத்தைக் கிள்ளுவதுகூட வன்முறைதான்.

நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தபோதுகூடப் பொம்மையா ‘கோச்சடையான்’ என்ற பெயரில் வன்முறை செய்தவர்தான் இவர்.
இதுபோன்ற வன்முறைகள் நடப்பதற்கே இவர்தான் காரணம்.

‘தளபதி படத்துல போலிசை நடுரோட்ல தலைவர் எப்படி வெரட்டி வெரட்டி வெட்டுவாரு தெரியுமா?’ என்று அதற்காகவே அவருக்கு ரசிகர்கள் ஆனவர் எத்தனை பேர் தெரியுமா?

மொதல்ல ஒழுங்கா சினிமா எடுங்க.. அப்புறம் தமிழர்களுக்கு அறிவுரை சொல்லலாம்.