நடிகர் அதர்வா நடிப்பில் வரும் மே-18 அன்று வெளிவர காத்திருக்கும் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. இவர் தற்போது ‘செம போத ஆகாதே’ மற்றும் `இமைக்கா நொடிகள்’ படங்களில் பிஸியாக உள்ளார். இதில் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் லிரிக்கல் வீடியோ, ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கின்றார். `பானா காத்தாடி’ படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் – அதர்வா ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தினை தொடர்ந்து `பூமராங்’, `இமைக்கா நொடிகள்’, `ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கும் நிலையில் இப்படம் வரும் மே 18-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!