‘தாரை தப்பட்டை’ படத்தில் இயக்குனர் பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கீரா ராஜ்புத். இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் “நர்மதா”.

பெண்மையை மையப்படுத்தி உறுவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா நடிக்கின்றார்.
தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை, ஒரு பயணத்தின் வழியாக நெகிழ்ச்சியாகச் இப்படம் சொல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் 7 வயது ஆண் குழந்தைக்கு நந்திதா அம்மாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவருடன் விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்படிப்பு இன்று நாகர்கோவிலில் துவங்கியதாக நடிகை நந்திதா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்!