இளைய தளபதி விஜய் வளர்ந்துவரும் பிரபலங்களுக்கு எப்போதுமே மறக்காமல் தன் வாழ்த்துக்களை கூறி வருகிறார்!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி வரவிருக்கும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகளை ரசிகர்கள் ஒருபுறம் செய்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் பாடலாசிரியல் அருண்ராஜா காமராஜிற்கு போன் செய்து விஜய் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருண்ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது..!

நீங்கள் எப்போதும் மற்றவர்களை ஊக்கப்படுத்த மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்க்கும் போது புத்துணர்வு கொடுத்துள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, இளம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அளித்தார்.

அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சந்தோஷ் நாராயணன். “விஜய் சாரிடம் இருந்து மிகச்சிறப்பான ஆச்சரியப் பரிசு கிடைத்திருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேட்டில், உங்கள் கையெழுத்திட்டுத் தந்ததில் மகிழ்ச்சி. இது எனக்கு மிகச்சிறப்பான தருணமாகும் நன்றி அண்ணா” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.