இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் காலா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து, காலா படத்தின் பாடல்களை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ம் மே 9-ஆம் நாள் இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன.அதையடுத்து, இந்தபடம் தணிக்கை குளுவினருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் காலா படத்திற்கு யு/ஏ சான்று அளித்துள்ளனர். காலா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜூன் 7-ல் ரிலீஸாக உள்ளது.