தல அஜித்தின் வேதாளம் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல், அஜித் எப்போதுமே ஒரு படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து தான் அடுத்த படம் பற்றி யோசிப்பார்.

நவம்பர் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகுதான் அடுத்த படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில், அஜித்தின் அடுத்த படம் பற்றிய செய்திகள் கோலிவூட்டில் வலம் வருகிறது.

மம்மூட்டி நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் சிறுத்தை சிவாவுடன் மற்றொரு படத்தில் மீண்டும் இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தது. அனேகன் புகழ் இயக்குனர் கே.வீ.ஆனந்த் இணைவதாக கூட பேசப்பட்டது.

எது எப்படியோ, யார் தல அஜித்தை இயக்குவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Loading...