ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் குறித்து இவர் பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கையில் பலரும் இப்படம் ரஜினியின் அரசியலுக்காக எடுக்கப்பட்டதா? என்று கேட்டனர்.

அதற்கு ரஞ்சித் ‘கண்டிப்பாக இது ரஜினியின் அரசியலுக்காக எடுக்கப்படவில்லை, இது மக்களின் படம்’ என்று பதில் அளித்தார்.

அது மட்டுமின்றி நீங்கள் அரசியல்வாதியா, சினிமா இயக்குனரா? என்று கேட்க. நான் அரசியல்வாதி தான் என்றும் பதில் அளித்துள்ளார்.