தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் செய்து பரபரப்பை கிளப்பியது அனைவருக்கும் தெரிந்ததே.

இவர் தொடர்ந்து பல நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்றுகூறி ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் குற்றம் சாட்டிவரும் பிரபலம் நடிகர் நானி. இவர் இப்போது தெலுங்கு பிக்பாஸ் 2வது சிசனின் தொகுப்பாளராக கமிட்டாகி இருக்கிறார்.

அதோடு நானி, ஸ்ரீரெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் வரமாட்டேன் என்று நடிகர் கூறியிருப்பதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. அந்த தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த ஸ்ரீரெட்டி, நானி உன் குடும்பம் மற்றும் தொழில் மீது சத்தியமாக கூறு நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...