தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் நேற்றிலிருந்தே தூங்காமல் ஒரு விஷயத்திற்காக தான் காத்திருக்கின்றனர். இன்று மாலை தளபதி-62 டைட்டில் வருவதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து இன்று முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் 62வது படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதை விஜய் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர்.

மேலும், மெர்சல் தான் அதிகமாக RT ஆன பர்ஸ்ட் லுக்காக இருக்க, இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.