இளையதளபதி விஜய் நடிக்கும் 62 வது படத்தில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது!!

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை அடுத்து நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஜய் 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. தற்போது இன்று தளபதி விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது லுக் படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் தலைப்பிற்கு ’சர்க்கார்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. தற்போது இன்று விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.