ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் “தலைவா”, அஜித்தின் “கிரீடம்”, விக்ரமின் “தாண்டவம்” மற்றும் “தெய்வத்திருமகள்” , ஆர்யா “மதராச பட்டினம்”, ஜெயம் ரவியின் “வனமகன்” மற்றும் “சைவம்”, “இது என்ன மயக்கம்”, “தேவி”, “தியா” ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது பிரபுதேவா நடிக்கும் “லட்சுமி” , ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “வாட்ச்மேன்” ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

2014 ஆம் இயக்குனர் விஜய்க்கும் , நடிகை அமலா பாலுக்கும் காதல் மலர்ந்து , அது அவர்களின் பெற்றோர்கல் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள் . ஆனால் இரண்டு வருடங்களிலே இருவருக்கும் கருத்து வேறுபாடுங்கள் முளைத்திட . இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

“நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம், என இயக்குனர் விஜய் கூறியுள்ளார். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

இந்நிலையில் விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு மறுத்து வந்த இயக்குனர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

மணப்பெண்ணை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோர்கள் கவனித்து கொண்டுள்ளனர், வேளைகள் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் விஜய் இடுபட்டுள்ளார்.