நடிகர் ஜீவா முதல் முறையாக காக்கிச் சட்டை அணிந்திருக்கிறார், ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள யான் படத்துக்காக.

‘என்றென்றும் புன்னகை’ படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் யான்.

இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடித்துள்ளார். மற்றும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் 2 மாதங்களுக்கு முன்பே வெளியாகின. இந்நிலையில் நேற்று முன்தினம் ‘யான்’ படத்தின் முழு நீள டிரைலர் வெளியானது.

படு விறுவிறுப்பான அந்த டிரைலரில் ஜீவா போலீஸ் யூனிபார்மில் வருகிறார். அதாவது ‘போலீஸ்’ அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு ஜீவா தன்னுடைய படங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. அப்படி பார்த்தால் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜீவா ரசிகர்க செம குஷியாக இருக்கிறார்கள் (மன்றம் வைத்து அதை சரியாக நடத்தியும் வருபவர் ஜீவா). வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவிருக்கிறது.