விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புலி படம் அவரை கொஞ்சம் மோசமாகவே பிராண்டிவிட்டது என்றுதான் சொல்லனும். ஒருபக்கம் வசூல் அப்படி இப்படி என்று கூறினாலும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தில்தான் முடிந்திருக்கிறது.

புலி படத்தினை தொடர்ந்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்திற்கு தலைப்பு இல்லாமல் விஜய்-59 என வைத்தே படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படத்தின் தலைப்பிற்கு ஆரம்பத்தில் காக்கி என அறிவித்தார்கள் ஆனால் அந்த தலைப்பு வேறு ஒரு இயக்குநரிடம் இருப்பதால் வேறொரு பெயரை யோசித்து வந்தார்கள் இடையில் வெற்றி என்ற தலைப்பு அடிபட்டது ஆனால் அதுவும் இல்லையென தெரிந்த பிறகு விஜய் ரசிகர்களுக்கு பொறுமையில்லாமல் தலைப்பை அறிவிக்கும்படி வேண்டுகோள் வைத்துக் கொண்டேயிருந்தார்கள். தற்போது இந்த படத்திற்கு “தாறுமாறு” என டைட்டில் வைத்துள்ளார்களாம். அதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாத நிலையில் இதுவும் சந்தேகத்தில்தான் இருக்கிறது. எமி ஜாக்ஷன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.