நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகம் ஆகும் மணியார் குடும்பம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

குனச்சித்திர நடிகர் தம்பி ராமையா, தனது மகன் உமாபதி ராமையாவை நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யும் திரைப்படம் மணியார் குடும்பம். இப்படத்தினை தம்பி ராமையா அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.

ஒரு குடும்பத்தலைவன் பொறுப்பு அற்றவனாக இருந்தால், அது அந்த குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் தம்பி ராமையா.

இயக்கியது மட்டுமில்லாமல், படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.