இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகரா களமிறங்கி பல படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் வசந்தபாலன் படத்தில் நடித்து வருகின்றார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ந்தி முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் இப்படத்திற்கு இசை நாயகன் ஜிவி பிரகாஷ் ஏற்கின்றார். ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா, படத்தொகுப்பு அருவி படத்தில் கலக்கிய ரேமண்ட் என தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் மிகவிரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.