பொண்ணுங்களா இருக்காங்க, அரை நிர்வாணமாக போற. நீட் எழுத போறேன் என்ற மரணகளாய் பூமராங் டிரைலர்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. இவர் தற்போது ‘செம போத ஆகாதே’ மற்றும் `இமைக்கா நொடிகள்’ படங்களில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து, இவர் பூமராங் என்ற வித்தியாசமான கதியில் உருவான திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் `பூமராங்’ படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். மேலும், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி திரைபடம் மூலம் பிரபலமான ராதான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை சோனி இசை நிறுவனம் வாங்கியுள்ளது. ஜெயம் கொண்டான் இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன், இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இருந்ததினால் தன் படத்தின் டிரைலரை அவர் குரு மூலம் வெளியிட்டுள்ளார்.