ராதா மோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 60 வயது மாநிறம்.

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படமானது இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுளார். அதில்,

கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக #60VayadhuMaaniram அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது!