பயங்கரமான பேய் படம் – வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிக்கும் “ பொட்டு “

Bharath
Bharath

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும்   இணைந்து தயாரித்திருக்கும்  “ சவுகார்பேட்டை “ படம் இம்மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் சவுகார்பேட்டை  படம் எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்து விட்டது. படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர்.

அத்துடன் அடுத்த படமான பொட்டுவையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரிக் கிறார்கள்.                                                                                                                                    “ பொட்டு “ படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறார். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார்.

எடிட்டிங்   –  எலீசா

பாடல்கள்   –  நா.முத்துகுமார், விவேகா

ஸ்டன்ட்   –  கனல்கண்ணன்

நடனம்   –  ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை  –  சங்கர்

தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

எழுதி இயக்குபவர் வடிவுடையான்.

படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது.

சவுகார்பேட்டை போன்றே இதுவும் திகில் கலந்த பேய் கதையாக உருவாகிறது.

மெடிக்கல் காலேஜ் பின்னணியில் பேய்க்கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் என்றார் வடிவுடையான்.