ஜெய் சுரபி ஜோடியாக நடிக்க , மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’  நாளுக்கு நாள் புகழ் பெற்றுக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் வெளி வந்த இந்த படத்தின் Trailer பார்த்தவர்கள் எல்லோரையும் கவர்ந்து உள்ளது என்பதற்கு வர்த்தக ரீதியாக இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பே சாட்சி. இந்த வெற்றியை தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினர்  படத்துக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணமாக படத்தில் வரும் ஒரு  முக்கியமான பாடலை ,நாளை நவம்பர்  19 ஆம் தேதி  வீடியோவில் வெளி இட உள்ளனர்.
 
கதைப்படி கதாநாயகன்  ஜெய் உடன் அவரது நண்பராக  நடிக்கும் ஆர்ஜே பாலாஜி இருவரும் அவர்களது  ஏரியாவில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றியும் பெற்று விடுகின்றனர். அந்த வெற்றியை கொண்டாடுவதற்கு  பாண்டிச்சேரி செல்கின்றனர்.அங்கு  அவர்கள்  பாடும்  பாடல் உற்சாகத்தின்  உச்சத்தில் இருக்கிறது.பாடலாசிரியர் அண்ணாமலை எழுதிய  ‘நாங்க பொடியன் ‘ என்றுத் துவங்கும் இந்தப் பாடல் இளம்  இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்லின் இசையில் தெறிக்கிறது.அனிருத் மற்றும் திவாகர் பாடியுள்ள இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்து இருப்பவர் பாபா பாஸ்கர்.
ஜெய் இந்த பாடலில் ஆடிய நடனம் படப்பிடிப்பு   குழுவினரை அசர வைத்தது. அவ்வளவு வேகம் , அவ்வளவு உற்சாகம்.  விரைவில் வெளி வர இருக்கும் ‘புகழ்’  எங்கள் எல்லோருக்கும் புகழ் தரும் படமாக இருக்கும். புகழுக்கு மேலும் புகழ் சேர்த்து இருக்கும் தயாரிப்பாளர்கள்S பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த்  பிரசாத்துக்கும், radiance மீடியா வருண் மணியன் அவர்களுக்கும் மிக்க நன்றி எனக் கூறினார் இயக்குனர் மணிமாறன்.