நவம்பர் 20க்கு மேல் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரியில் 2ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறது.

சென்றவாரம் மலேசியாவில் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய சென்றபோது ‘சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆசி பெற்றனர்.

படத்தின் தலைப்பைக் கேட்ட சூப்பர் ஸ்டார் அவர்கள் மிகவும் சந்தோஷம் பட்டதுடன் நிச்சயம் இந்தப் படம் ‘ஹிட்“ ஆகும் என்று ஆசி வழங்கினார். புதுமுக நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் துஷ்யந்த் தெரிவித்தார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் போலவே சிறந்த திரைப்படங்களை தயாரித்து மென்மேலும் இந்த நிறுவனம் வளர் வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் வாழ்த்தினார்.

நடிகர்கள் : ‘இளையதிலகம்” பிரபு – காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி – எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்

கதை – இயக்கம் : அமுதேஷ்வர் இசை : டி.இமான்

ஆர்ட் : பிரபாகர்

ஓளிப்பதிவு : ல~;மணன்

எட்டர் : கெவின்

மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு

தயாரிப்பு : துஷ்யந்த் – அபிராமி துஷ்யந்த்