சிவகார்த்திகேயன் நடிப்பில் பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் படம் ரஜினி முருகன். இவை அனைத்திற்கும் காரணம் லிங்குசாமியின் கடன் பிரச்சனை தான்.

இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி இப்படம் வெளிவருவதாக கூறப்பட்டது. திடிரென்று இப்படத்தை வெளியிட இருந்த வேந்தர் மூவிஸ் தற்போது விலகிவிட்டதாம்,

மேலும் கோபுரம் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுவதாக கூறி சமீபத்தில் இப்படத்தை பார்த்ததாம். ஆனால், இன்று வரை பதில் கூறாமல் அவர்கள் இருக்க, சிவகார்த்திகேயன் தரப்பை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம். படம் வருமா? வராதா? என்று இன்னும் குழப்பம் நீடித்து வருகின்றது.