சின்ன கலைவானன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் விவேக். இவர் நீண்ட நாட்களாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு மரம் நடுதல் போன்ற நற்பணிகளை செய்து வந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைக்க வழக்கம் போல் படங்கள் குவிய ஆரம்பித்துவிட்டது. இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இவர் நடிக்கும் படத்தை தான் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ கௌதம் என்னை அவர் சொல்வது போல் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லாமல், உங்கள் பாணியிலேயே நடிங்கள் என்று முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்’ என டுவிட் செய்துள்ளார்.