தல அஜித் தற்போது சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அஜித் சிவாவுடனான கூட்டணி முடிவுக்கு வர உள்ளது.

அதன் பின்னர் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங் படத்தின் ரி-மேக்கில் நடிக்க உள்ளார். இதனால் இந்த படம் செம மாஸ் அண்ட் கிளாசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தற்போது மற்றொரு சூப்பர் தகவலும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் யுவன் கூட்டணியில் உருவாகி இருந்த தீனா, பில்லா, பில்லா 2, மங்காத்தா ஆகிய படங்களில் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது குறிப்பிடத்தக்கது.