விநாயகர் சதுர்த்தி சிறப்பு: ரஜினியின் “2.0” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது…

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படம் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இதுதான். இந்த படத்திற்கு 3000 பேர் கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பது உறுதி.