கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். ஆனால் அவர்க்ளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் பாடகி சின்மயி 13 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். “2005 அல்லது 2006 இருக்கும்.. அப்போது சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட ‘வீழமாட்டோம்’ என்ற விழாவுக்கு சென்றிருந்தோம். அந்த விழா முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் சின்மயி மற்றும் அவரது அம்மாவை மட்டும் காத்திருக்க வைத்தனர். அதன் பின் வைரமுத்து அறைக்கு சென்று சந்திக்க சின்மயியை அழைத்துள்ளனர்.”

“ஒத்துழைக்காவிட்டால் உன் கேரியர் இருக்காது” என கூறி மிரட்டினார்களாம். அதனால் கோபமான சின்மயி உடனே “கேரியர் வேண்டாம் மண்ணும் வேண்டாம்” என கூறி, உடனே இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டார்களாம்”.

சின்மயியின் குற்றச்சாட்டு
சின்மயியின் குற்றச்சாட்டு

சின்மயியின் இந்த குற்றச்சாட்டு தற்போது சினிமா துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.