எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).

இப்படத்தில் இளையதளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.
  B. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன்  பி வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள்  மற்றும்தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.