கேப்டன் இஸ் பேக் இந்த வார்த்தையை கேட்டதும் தமிழக ரசிகர்களுக்கு செம்ம உற்சாகம். இந்நிலையில் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கேப்டன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் தமிழன் என்ற சொல்.

இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழக்கு பேட்டியளித்த இயக்குனர், ‘நான் ரவிவர்மன், ‘காக்கா முட்டை’ மணிகண்டனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளேன், 200க்கு மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியுள்ளேன்.

இது ஒரு குடும்பம் சார்ந்த திரைப்படம். கேப்டனும் படத்துல அரசியல் வசனம் எதுவும் வேணாம்னு தெளிவா சொல்லிட்டார். விஜய்க்கு‘செந்தூரபாண்டி’ மாதிரி, சண்முக பாண்டியனுக்கு இந்தப் படம் இருக்கும்.’ என கூறியுள்ளார்.

Loading...