நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யப் போகும் ஜீவா!

ஜீவா
ஜீவா

நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து அடுத்ததாக லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் பண்ணப் போகிறார் ஜெமினி கணேசன் நாயகன் ஜீவா.

திருநாள், போக்கிரிராஜா படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெமினி கணேசன் படத்தில் நாயகனாக ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். முத்துக்குமார் இயக்கப் போகும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனனை படக்குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.

முன்னதாக அஜீத்தின் வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கை வேடத்தில் நடித்து லட்சுமி மேனன் அசத்தியிருந்தார். வேதாளம் படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் மிருதன், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஜீவாவுடன் லட்சுமி மேனன் இதுவரை நடித்ததில்லை இதனால் ஜெமினிகணேசன் படத்தில் இவரை ஜோடியாக்கி படக்குழுவினர் அழகு பார்த்திருக்கின்றனர். ஜெமினி கணேசன் படத்தின் தலைப்பைப் போலவே ஜீவாவின் கதாபாத்திரத்தை இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

திருநாள் படத்தில் ரவுடியாக நடித்த ஜீவா இதில் லவ்வர் பாயாக நடித்து அசத்தப் போகிறாராம்.

Loading...