அரண்மனை-2 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில், வினய், ஆன்ட்ரியா, லட்சுமி ராய் ஆகியோரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் த்ரில்லர் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி, அரண்மனை இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார்.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக த்ரிஷா கூறியுள்ளார்.

இதுப்பற்றி த்ரிஷா மேலும் கூறியிருப்பதாவது… அரண்மனை-2 ஷூட்டிங் முடிந்துள்ளது. ஆனால் படத்தை பார்க்க பொங்கல் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

அரண்மனை-2 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட உள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.