அட்டகத்தி, சூதுகவ்வும், காக்காமூட்டை படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜஸ்வர்யா ராஜேஷ். இவர் சைதாப்பேட்டை குடிசைப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருப்பது குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். காக்காமூட்டை படத்தில் நான் நடிக்கும் போது டைரக்டர் மணிகண்டன் என்னை சைதாப்பேட்டை குடிசை பகுதியில் கொண்டு விட்டார்.

அங்கேயே இருந்து அவர்களது வாழ்க்கையை அப்படியே தெரிந்து கொண்டேன். இதனால் நான் அந்த படத்தில் நான் சிறப்பாக நடிக்க முடிந்தது. சுமார் 60 நாட்கள் அவர்களுடன் நான் வாழ்ந்து இருக்கிறேன். வெள்ளம், மழை இல்லாத நாட்களிலேயே அவர்ளை நினைத்து நான் கண்கலங்கி இருக்கிறேன். மையப்பகுதியான சைதாப்பேட்டையில் வாழும் இவர்களை பற்றி கூட யாரும் கவலைப்படவில்லையே என்று நினைத்து நான் வருந்தி இருக்கிறேன்.

ஒரு முறை அவர்களது வேதனையை பற்றி நான் பேசும்போது எனக்கு நிறைய மிரட்டல் வந்தது.‘ நீ நடிகை நடிப்பை மட்டும் பார்த்து விட்டு போ’ என்று மிரட்டினார்கள். இப்போது அவர்கள் வாழும் இடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் படும் வேதனைகளை நினைத்தால் கண்ணீர் வருகிறது. சாப்பிட கூட மனம் இல்லை. மிகவும் வருந்தமாக இருக்கிறது. இவர்களுக்கு விடிவு காலம் இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.