மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு காமெடி நடிகர்களான மயில்சாமி, இமான் ஆகியோர் உணவுகளை வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர்.

சென்னையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று நடிக, நடிகையர் நேரடியாக உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர்கள் மயில்சாமி, இமான் அண்ணாச்சி ஆகியோர் மக்களுக்குத் தேவைப்படும் உணவுகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நேரடியாக வழங்கி வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி தற்காலிக படகு ஒன்றின் மீது மற்றவர்களுடன் இணைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கி வருகிறார்.

இதே போன்று மற்றொரு காமெடி நடிகரான இமான் அண்ணாச்சியும் பாதிக்கப்பட மக்கள் இருக்கும் பகுதியில் வீடு, வீடாக சென்று உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்.

கடுமையான மழையிலும் மக்களுக்கு உதவிகள் புரியும் இவர்களின் சேவை மனப்பான்மை உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியதுதான்.