தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் விஜய்-அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். இவர்கள் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக சண்டையிட்டு கொள்வார்கள்.

ஆனால், சென்னை மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து இரு தரப்பு ரசிகர்கள் ஒன்றினைந்து போட்டிப்போட்டு கொண்டு உதவி வருகின்றனர்.

இதில் மேலும் ஒரு நற்செய்தியாக இனி, நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஹிம்…சொன்ன வாக்கை காப்பாற்றினால் நல்லது.