விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் புகழ் இயக்குனர் பரதன் தான்விஜய்யின் 60வது படத்தை இயக்க இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம். தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறாராம். விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்குமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.