தயாரிப்பாளர் தனுஷுக்கு விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 50 நாட்களை கடந்து ஓடுவதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். விஐபி படத்தை பிளாக் பஸ்டராக்கிக் கொடுத்த ரசிகர்களுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தனுஷ் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை தயாரிக்கிறார். விஜய் சேதுபதியை அடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்க தனுஷ் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாணா படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் விஜய்யின் கத்தி படத்துடன் மோதுகிறது.

தனுஷும், விஜய்யும் நண்பேன்டா ஆகிவிட்டனர். அதனால் தனுஷின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றி வைக்கலாம்.