இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகவிருக்கின்றது எந்திரன்-2. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

இதில் ரஜினிகாந்த் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும்நடிக்கவுள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘இப்படத்தில் நடிப்பதன் மூலம் என் வாழ்நாள் கனவு நிறைவேறியது போல் உள்ளது’ என கூறியுள்ளார்.

மேலும், இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் 3டியில் உருவாக்கப்படும் எந்திரன் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் இதில் இணைகிறார்.