ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படம் எந்திரன் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

அனைவரும் அர்னால்ட் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்ட நிலையில், திடிரென்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இதில் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கின்றார்.

இதுக்குறித்து தயாரிப்பாளர் தரப்பில் “ஒப்பந்த முரண்பாடுகள்… இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும்மான இடைவெளியை நிரப்புவதில் இருக்கும் உண்மையான சவால் இது. உங்களின் ஆதரவுக்கு நன்றி திரு.பாட்ரிக் ஸ்வார்ஷ்நெகர்” என்று லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.