தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் தங்கமகன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை தான் இன்று வரை பெற்று வருகின்றது.

ஆனால், படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம் முதல் 3 நாட்களுக்கு. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 21 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் வார நாட்களில் வசூலை பொறுத்தே படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியும் என கூறப்படுகின்றது.